கூடுதல் காப்பீடானது தன்னிச்சையானது. மேலும் அடிப்படை காப்பீட்டின் கீழ் வராத கூடுதல் சேவைகளை இதன் மூலமாக நீங்கள் பெறலாம்.  எனினும் ஒவ்வொரு காப்பீடு கழகத்திலும் தரக்கூடிய சேவைகள் மாறுபடும். பெரும்பாலும் கீழே காணப்படும் சேவைகள் கூடுதல் காப்பீட்டின் கீழ் வரும். உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் மருத்துவமனையில் தங்குவதற்கான செலவுகள், மருத்துவ வல்லுனர்களிடம் பெறப்படும் சிகிச்சைகள், மாற்று மருத்துவம், முன்னெச்சரிக்கையாக செய்யப்படும் பரிசோதனைகள், பல்வரிசை சீர் படுத்துதல் மற்றும் தடுப்பூசிகள்

கூடுதல் காப்பீடு திட்டத்தின் கீழ் நாங்கள் அளிக்கும் சேவைகள்

  • புற நோயாளி சேவைகள்: மூக்கு கண்ணாடி மற்றும் காண்டாக்ட் லென்ஸ்களின் செலவுகள், உடற்பயிற்சி அல்லது உடல் நல சேவைகளுக்கான செலவுகள், மருத்துவமனை-வீட்டின் இடையே போக்குவரத்து செலவுகள் மற்றும் அவசர உதவி செலவுகள், நோயைக் கண்டறிய மற்றும் முன்னெச்சரிக்கையாக செய்யப்படும் பரிசோதனைகள் மற்றும் கூடுதல் மருந்துகள்.
  • மாற்று மருத்துவ சேவைகள்: மாற்று மருத்துவ முறையிலான சிகிச்சைகள் மற்றும் மாற்று மருத்துவ மருந்துகள்
  • மருத்துவமனை: மருத்துவமனையில் அதிக வசதி மற்றும் தனிப்பட்ட இடம். சுவிஸ் நாட்டில் எந்த மருத்துவமனையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஒருவர் அல்லது இருவர் தங்க கூடிய அறை, தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சைத் துறையினைப் பொருத்து மருத்துவரைத் தேர்வு செய்தல், உடல்நிலை தேறுவதற்கான ஆரோக்கிய மையங்கள் மற்றும் மகப்பேருக்கு பின் பிள்ளையுடன் ஒரே அறையில் தங்குதல் (Rooming-In) போன்ற கூடுதல் காப்பீடு சேவைகளையும் பெறலாம்.
  • அடிப்படை: கூடுதல் காப்பீடு சேவைகளான Ambulant II, Komplementär II மற்றும் உங்கள் விருப்பப்படியான ஒரு மருத்துவமனை கூடுதல் காப்பீடு.

எங்களுடைய அடிப்படை காப்பீடுகளான Ambulant, Spital மற்றும் Komplementär ஆகியவற்றைத் தவிர உங்களுடைய பல் ஆரோக்கியத்தை அல்லது உடல் நலமின்மை மற்றும் விபத்தின் காரணமாக ஏற்படும் பணத்தட்டுப்பாட்டிலிருந்து வேறு சில குறிப்பிட்ட கூடுதல் காப்பீடுகள் காக்கும்.

* எங்களுடைய வலைத்தளம் ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் மட்டுமே உள்ளது. பிற மொழிகளுக்கு உங்கள் பிரௌசரில் உள்ள மொழிபெயர்ப்பு செயலியினை பயன்படுத்தவும்