Langue

Caisse-maladie et assurances en Suisse: ce qu’il faut savoir

S’installer dans un nouveau pays peut être un défi. Soudain, on devient un étranger ou une étrangère. Nous vous aidons à trouver rapidement vos repères en Suisse, notamment en matière d’assurance.

  • L’assurance-maladie (également appelée assurance de base) est obligatoire pour toutes les personnes résidant en Suisse. Vous devez conclure une assurance de base dans les trois mois suivant votre arrivée.

  • Toute personne travaillant au moins huit heures par semaine chez le même employeur est automatiquement assurée par son employeur contre les accidents professionnels et non professionnels. Les personnes qui ne travaillent pas, les indépendants/es ou les membres de leur famille doivent faire inclure la couverture du risque-accident par leur caisse-maladie.

  • L’assurance complémentaire facultative vous permet d’assurer des prestations complémentaires qui ne sont pas ou que partiellement prises en charge par l’assurance de base.

  • Non obligatoire, mais fortement recommandée. Offre une protection en cas de dommages que vous causez à des tiers ou de dommages à vos propres biens.

  • Spécialement utile pour la mobilité et en cas de conflits dans la vie quotidienne.

  • நீங்கள் பணியில் உள்ளவரானால், மேலும் வாரத்திற்கு 8 மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்கிறீvர்கள் என்றால் உங்களுக்கு நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மூலமாக விபத்துக்கான காப்பீடு பெறப்பட்டிருக்கும்.

  • குறைந்த வருமானம் உள்ளவர்கள் பண உதவி கேட்டு, அதாவது காப்பீட்டுச் சந்தா மானியத்திற்காக (Prämienverbilligung) விண்ணப்பிக்கலாம்.

Nos solutions d’assurance pour les nouveaux/elles arrivants/es

En tant qu’assureur toutes branches, Visana offre une protection complète adaptée à votre situation, de l’assurance de base à l’assurance de voyage.

Tout ce qu’il faut savoir sur la caisse-maladie en Suisse

En Suisse, l’assurance-maladie est obligatoire pour tout le monde. L’assurance de base couvre les besoins de base en cas de maladie, d’accident et de maternité. Toutes les caisses-maladie offrent les mêmes prestations. Les primes dépendent de votre lieu de résidence, de votre âge et du modèle d’assurance de base que vous avez choisi.

Avec une assurance complémentaire, vous assurez des prestations qui ne sont pas prises en charge par l’assurance de base. En font par exemple partie l’acupuncture, l’ostéopathie ou les massages. Selon l’assurance, vous bénéficiez de contributions pour votre abonnement de sport, vos lunettes et lentilles de contact et vos soins dentaires.

காப்பீடு திட்டங்கள்

நீங்கள் அடிப்படை காப்பீட்டினை வாங்கும் பொழுது உங்களுக்கு உகந்த ஒரு திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தினை.

  • உங்களுக்கு நம்பகமான மருத்துவரை நீங்களே தேர்வு செய்யலாம், மற்றும் நேரடியாக மருத்துவ நிபுணர்களை அணுகலாம்.

  • உங்கள் குடும்ப மருத்துவரையோ அல்லது பல மருத்துவர்கள் சேர்ந்து நடத்தும் கிளினிக்கை அணுகலாம்.

  • நீங்கள் எப்பொழுதும் முதலில் Medi24-யை பயன்படுத்த வேண்டும் - தொலைபேசி அல்லது சேட் மூலம்.

  • குடும்ப மருத்துவர் அல்லது தொலைபேசிமூலம் மருத்துவ சேவை உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது: குடும்ப மருத்துவர் அல்லது Medi 24 தொலைபேசி மருத்துவ சேவையைப் பயன்படுத்தலாம். 

கூடுதல் காப்பீடானது தன்னிச்சையானது. மேலும் அடிப்படை காப்பீட்டின் கீழ் வராத கூடுதல் சேவைகளை இதன் மூலமாக நீங்கள் பெறலாம்.  எனினும் ஒவ்வொரு காப்பீடு கழகத்திலும் தரக்கூடிய சேவைகள் மாறுபடும். பெரும்பாலும் கீழே காணப்படும் சேவைகள் கூடுதல் காப்பீட்டின் கீழ் வரும். உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் மருத்துவமனையில் தங்குவதற்கான செலவுகள், மருத்துவ வல்லுனர்களிடம் பெறப்படும் சிகிச்சைகள், மாற்று மருத்துவம், முன்னெச்சரிக்கையாக செய்யப்படும் பரிசோதனைகள், பல்வரிசை சீர் படுத்துதல் மற்றும் தடுப்பூசிகள்

கூடுதல் காப்பீடு திட்டத்தின் கீழ் நாங்கள் அளிக்கும் சேவைகள்

  • மூக்கு கண்ணாடி மற்றும் காண்டாக்ட் லென்ஸ்களின் செலவுகள், உடற்பயிற்சி அல்லது உடல் நல சேவைகளுக்கான செலவுகள், மருத்துவமனை-வீட்டின் இடையே போக்குவரத்து செலவுகள் மற்றும் அவசர உதவி செலவுகள், நோயைக் கண்டறிய மற்றும் முன்னெச்சரிக்கையாக செய்யப்படும் பரிசோதனைகள் மற்றும் கூடுதல் மருந்துகள்.

  • மாற்று மருத்துவ முறையிலான சிகிச்சைகள் மற்றும் மாற்று மருத்துவ மருந்துகள்

  • மருத்துவமனையில் அதிக வசதி மற்றும் தனிப்பட்ட இடம். சுவிஸ் நாட்டில் எந்த மருத்துவமனையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஒருவர் அல்லது இருவர் தங்க கூடிய அறை, தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சைத் துறையினைப் பொருத்து மருத்துவரைத் தேர்வு செய்தல், உடல்நிலை தேறுவதற்கான ஆரோக்கிய மையங்கள் மற்றும் மகப்பேருக்கு பின் பிள்ளையுடன் ஒரே அறையில் தங்குதல் (Rooming-In) போன்ற கூடுதல் காப்பீடு சேவைகளையும் பெறலாம்.

  • கூடுதல் காப்பீடு சேவைகளான Ambulant II, Komplementär II மற்றும் உங்கள் விருப்பப்படியான ஒரு மருத்துவமனை கூடுதல் காப்பீடு.

எங்களுடைய அடிப்படை காப்பீடுகளான Ambulant, Spital மற்றும் Komplementär ஆகியவற்றைத் தவிர உங்களுடைய பல் ஆரோக்கியத்தை அல்லது உடல் நலமின்மை மற்றும் விபத்தின் காரணமாக ஏற்படும் பணத்தட்டுப்பாட்டிலிருந்து வேறு சில குறிப்பிட்ட கூடுதல் காப்பீடுகள் காக்கும்.

* எங்களுடைய வலைத்தளம் ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் மட்டுமே உள்ளது. பிற மொழிகளுக்கு உங்கள் பிரௌசரில் உள்ள மொழிபெயர்ப்பு செயலியினை பயன்படுத்தவும்

மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு நீங்கள் கண்டிப்பாக சந்தா செலுத்த வேண்டும். அடிப்படை காப்பீட்டுச் சந்தாவின் அளவு நீங்கள் வசிக்கும் இடம், உங்கள் வயது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் காப்பீட்டு திட்டம், மற்றும் கழிப்புத்தொகையை பொருத்து மாறும். கழிப்புத்தொகையானது வருடம் தோறும் நீங்கள் அடிப்படை காப்பீட்டிற்கு உங்கள் பங்காக செலுத்த வேண்டிய தொகை. பெரியவர்கள் அவர்களின் கழிப்புத்தொகையை விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம். இது CHF 300.-லிருந்து CHF 2500.- வரை மாறும். சிறு பிள்ளைகளும் இளம்பருவத்தினரும் 18 வயது வரை கழிப்புத்தொகை எதுவும் செலுத்தாமல் அல்லது அதிகப்பட்சம் CHF 600.- வரை செலுத்தி காப்பீடு பெறலாம். காப்பீடு செய்பவர் கழிப்புத்தொகையை முதலில் செலுத்திய பின் மீதமுள்ள தொகையைக் காப்பீட்டுக் கழகம் ஈடு செய்யும்.

கழிப்புத்தொகை முழுவதுமாக முடிந்து விட்டால், மேற்படி ஏற்படும் செலவுகளை காப்பீட்டுக் கழகம் ஏற்றுக் கொள்ளும். நீங்கள் அத்தொகையில் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட உங்கள் சுய பங்களிப்பை மட்டும் கட்ட வேண்டி இருக்கும்.

  • பெரியவர்கள்: 10% சுய பங்களிப்பு அதிகபட்சம் CHF 700.- 

  • சிறுவர்கள்: 10% சுய பங்களிப்பு CHF 350.- வரை

இதைத் தெரிந்து கொள்வது நல்லது

கழிப்புத்தொகை, அதாவது நீங்கள் உங்கள் பங்குக்கு செலுத்த வேண்டிய தொகை, எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ மாதாந்திர காப்பீட்டுச் சந்தா தொகை அவ்வளவு குறைவாக இருக்கும். குழந்தைகளுக்கு கழிப்புத்தொகையினை செலுத்தாமல் (அதாவது CHF 0.-)

* எங்களுடைய வலைத்தளம் ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் மட்டுமே உள்ளது. பிற மொழிகளுக்கு உங்கள் பிரௌசரில் உள்ள மொழிபெயர்ப்பு செயலியினை பயன்படுத்தவும்


 

நீங்கள் பணியில் உள்ளவரானால், வாரத்திற்கு 8 மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மூலமாக விபத்துக்கான காப்பீடு பெறப்பட்டிருக்கும். இந்த காப்பீட்டு திட்டத்தில் தரப்படும் சேவைகள் அனைத்தும் விபத்து காப்பீட்டுச் சட்டத்தின்படி (UVG) உள்ளவைகளாகும். எனவே மருத்துவ காப்பீடு வாங்கும்போது நீங்கள் விபத்து காப்பீட்டினை வாங்காமல் தவிர்த்து செலவை மிச்சப்படுத்தலாம். மேலும் மிகவும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு அவர்களின் மருத்துவ காப்பீட்டுச் சந்தாவிற்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்திற்கு சந்தா குறைப்பு என்று பெயர்.

ஒருவேளை நீங்கள் சுயதொழில் புரிபவராக இருந்தாலோ அல்லது பணியில் இல்லை, அல்லது வாரத்திற்கு 8 மணி நேரத்திற்கு குறைவாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்றாலோ உங்களுக்கு விபத்து காப்பீடு கிடைக்காது. எனவே நீங்கள் கூடுதலாக விபத்து காப்பீட்டினையும் வாங்க வேண்டும்.

இதைத் தெரிந்து கொள்வது நல்லது

சுவிஸ் நாட்டில் மருத்துவ காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு இரண்டுமே கட்டாயமானவை. எனவே உங்களுடைய காப்பீட்டுத் தொகையினை உங்களுடைய வாழ்க்கைத்தரத்திற்கு ஏற்றவாறு அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.

  • உபயோகப் பொருட்கள் காப்பீடு உங்களுடைய உடைமைகள் அனைத்தையும் நெருப்பு அல்லது இயற்கை சீற்றங்கள் மற்றும் திருட்டு அல்லது தண்ணீரினால் ஏற்படக்கூடிய சேதம், கண்ணாடி உடைதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. மரப்பொருட்கள், உடைகள், காலணிகள், தொலைக்காட்சி பெட்டி, கணினி, அலைபேசி, உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் ஆகிய அனைத்திற்கும் காப்பீடு அளிக்கப்படும்.

  • நடைபயிற்சி செல்லும் போது ஜாகிங் செல்பவரை உங்கள் நாய் கடித்து விட்டது அல்லது நீங்கள் வண்டியை பார்க் செய்யும் பொழுது வேறு ஒரு வண்டியின் மீது மோதி விட்டீர்கள். எங்களுடைய தனிநபர் பொறுப்புக் காப்பீடு நீங்கள் ஒரு மூன்றாவது நபரின் உடமை அல்லது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி விட்டீர்கள் எனில் உங்களை பண நஷ்டத்தில் இருந்து காப்பாற்றும்.

    நீங்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்(Gut zu wissen): தனி நபர் பொறுப்புக் காப்பீடு கட்டாயமான ஒன்று அல்ல. எனினும் நீங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தீர்கள் எனில் வீட்டின் உரிமையாளர் இந்த காப்பீட்டினை நீங்கள் வாங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். மேலும் ஒரு சில காண்டோண்களில் நாய் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக தனி பொறுப்புக் காப்பீடு வைத்திருக்க வேண்டும் என விதிமுறை உள்ளது.

  • எங்களுடைய கட்டிட காப்பீடு உங்களுடைய ஒன்று முதல் மூன்று குடியிருப்புகளை கொண்ட தனி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றிற்கு நெருப்பு மற்றும் இயற்கை சீற்றம், வெள்ளம் அல்லது தண்ணீர் ஆகியவற்றினால் ஏற்படும் சேதங்கள் மற்றும் கண்ணாடி உடைதல் போன்றவற்றிற்கு காப்பீடு அளிக்கிறது.

  • ங்கள் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரருடன் மோதல் அல்லது சாலை விபத்து, உங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என்றாலும் கூட மிகவும் நாள்பட்ட, உங்கள் செல்வத்தை கரைக்கக்கூடிய சட்டப் பிரச்சனைகளில் முடியலாம். விசானாவின் சட்டப்பாதுகாப்பு காப்பீடு உங்களுக்கு வக்கீல் அல்லது நீதிமன்ற செலவுகள் மேலும் நிபுணர்களுக்கான செலவுகள் அல்லது வல்லுநர்களின் அறிக்கை செலவுகள் அல்லது தீர்ப்பின்படி செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றை ஈடு செய்யும்.

    இதைத் தெரிந்து கொள்வது நல்லது: மருத்துவர்களுடன் அல்லது சமூக மற்றும் தனியார் காப்பீடு கழகங்களுடன் உங்களுக்கு எதுவும் வாக்குவாதங்கள் ஏற்பட்டால் விசானாவில் அடிப்படை காப்பீடு வைத்துள்ள அனைவருக்கும் எங்களுடைய உடல்நல சட்டப் பாதுகாப்பு கட்டணமின்றி கிடைக்கும்.

* எங்களுடைய வலைத்தளம் ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் மட்டுமே உள்ளது. பிற மொழிகளுக்கு உங்கள் பிரௌசரில் உள்ள மொழிபெயர்ப்பு செயலியினை பயன்படுத்தவும்

  • காலம் தாமதித்து பிரேக் அடித்தீர்களா? அல்லது வாகனங்களை நிறுத்தும் இடத்தில் கம்பங்களை கவனிக்காமல் மோதி விட்டீர்களா? விசானாவின் மோட்டார் வாகன காப்பீடு பல்வேறு விதமான சேதங்களுக்கு எதிராகக் காப்பீடு உத்திரவாதம் அளிக்கிறது. உதாரணமாக விபத்து நடந்த பின் ஏற்படும் செலவுகள் மற்றும் வாகனத்தின் டயர் பஞ்சரானால் ஏற்படக்கூடிய செலவுகள் போன்றவை.

  • நீங்கள் எங்கே பயணம் செய்தாலும் எங்களுடைய வேக்கன்சா (Vacanza) பயணக் காப்பீட்டின் மூலமாக வெளிநாடுகளில் பிரச்சனையில்லாமல் தங்கலாம். எங்களுடைய 24-மணி நேர உடனடி உதவி சேவை, பயணம் இரத்தானால் ஏற்படும் நஷ்டத்திற்கு எதிரான காப்பீடு, உலகில் எங்கு வேண்டுமனாலும் மருத்துவமனையில் தங்குதலுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக நீங்கள் நோய், விபத்து மற்றும் பிற சூழ்நிலைகளிம் பாதுகாக்கப்படுகிறீர்கள்.

* Our website is available in German, French and Italian. For other languages, use your browser’s automatic translation function.

  • 3a-கணக்கின் மூலமாக உங்கள் ஓய்வூதியத்தை சேமித்து வரியினை குறைக்கலாம். விசானாவின் ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக நீங்கள் உங்கள் வருங்காலத்திற்காக சேமிக்கலாம். மேலும் இதன் மூலமாக உங்கள் வரிப்பணத்தில் வருடத்திற்கு CHF 7,056 சேமிக்கலாம். ஒரு வேளை நீங்கள் சுய தொழில் செய்பவராக இருந்தால் இத்தொகைக்கு மேலேயும் சேமிக்கலாம்.

  • எங்களுடைய எண்டோமென்ட் காப்பீட்டு திட்டம் உங்களையும் உங்கள் குடும்பத்தினையும் உடல் நலமின்மை அல்லது விபத்தின் காரணமாக ஏற்படக்கூடிய பணத்தட்டுப்பாட்டிலிருந்து பாதுகாக்கிறது. நாங்கள் இந்த எண்டோமென்ட் காப்பீட்டு திட்டத்தினை எதிர்பாராமல் ஏற்படக்கூடிய பணத்தட்டுப்பாட்டினை தவிர்ப்பதற்காக சிறுபிள்ளைகளுக்கும், இளவயதினருக்கும், கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், பணியில் இல்லாதவர்களுக்கும், சுயதொழில் புரிபவர்களுக்கும், பணியில் உள்ளவர்களுக்கும் பரிந்துரை செய்கிறோம்.

  • தினசரி செலவுத்தொகை காப்பீடு: எங்களுடைய தினசரி செலவுத்தொகை காப்பீட்டின் மூலமாக நீங்கள் உங்களை விபத்து, நோய், அல்லது மகப்பேறு காரணமாக வேலை செய்ய இயலாத போது ஏற்படக்கூடிய பணத்தட்டுப்பாட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

* எங்களுடைய வலைத்தளம் ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் மட்டுமே உள்ளது. பிற மொழிகளுக்கு உங்கள் பிரௌசரில் உள்ள மொழிபெயர்ப்பு செயலியினை பயன்படுத்தவும்

குடியேற்றத்திற்கான செக் லிஸ்ட்

ஆறு எளிமையான அடிகளில் சுவிஸ் நாட்டிற்கு வந்தடையுங்கள்

    • சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்த எட்டு நாட்களுக்குள் உங்களின் குடியிருப்பு முகவரியினை பதிவு செய்யவும்
    • நீங்கள் மூன்று மாதங்களுக்கு மேல் தங்குவதாக இருந்தால் தங்கும் அனுமதி மற்றும் தேவைப்பட்டால் பணி செய்ய அனுமதி இவை இரண்டிற்கும் விண்ணப்பம் செய்யுங்கள்

    இதற்கு நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடியிருப்பு பதிவு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும். அனைத்து தகவல்களையும் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் விவரங்களையும் இந்த வலைத்தளத்தில் காணலாம்: sem.admin.ch

    • நீங்கள் குடிபெயர்ந்த மூன்று மாதங்களுக்குள் உங்களுடைய கட்டாய மருத்துவ காப்பீட்டினை வாங்கி விடவும்
  1. இடைத்தரகு ஏஜென்சி அல்லது ஆன்லைனில் வாடகைக்கு அல்லது விற்பனைக்கு உள்ள வீடுகளை ஒப்பிடுங்கள். ஒரு வீட்டினை பார்க்கச் செல்லும் பொழுது கீழ்க்கண்ட ஆவணங்களைத் தயாராக வைத்திருங்கள்:

    • உங்கள் தங்கும் அனுமதி அல்லது செல்லுபடியாகும் அடையாள அட்டையின் நகல்
    • உங்கள் பணி நியமன ஒப்பந்தத்தின் நகல்
    • நீங்கள் கடைசியாகத் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளரைத் தொடர்பு கொள்ள தேவையான தகவல்கள்
    • உங்கள் கடன் விவரங்கள் (நீங்கள் குடியிருக்கும் நகராட்சி அலுவலகத்தில் கிடைக்கும்)    
  2. வங்கிகள் மற்றும் சுவிஸ் நாட்டின் பிற பண நிறுவனங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் இங்கே பெறலாம்: schweizer-banken.info. உங்கள் வங்கிக்கணக்கினைத் திறக்க கீழ்கண்ட ஆவணங்களைத் தயாராக வைத்திருக்கவும்.

    • செல்லுபடியாகும் அடையாள அட்டை
    • தங்கும் அனுமதி அல்லது வசிப்பிடத்தை உறுதி செய்யும் சான்றிதழ்
    • பணி நியமன ஒப்பந்தம் (நீங்கள் பணியில் இருக்கிறீர்கள் என்றால்)
  3. உங்கள் மோட்டார் வாகனத்தை பதிவு செய்ய மற்றும் பிற பணிகளுக்கு உங்களுடைய காண்டோனில் போக்குவரத்து அலுவலகத்தினை அணுகவும். அனைத்து முகவரிகள் மற்றும் தகவல்களை நீங்கள் இங்கே காணலாம்: asa.ch

    • நாட்டிற்குள் நுழைந்த பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு உங்கள் ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் எழுத வேண்டும்
    • குறிப்பிட்ட கெடுவிற்குள் உங்கள் வாகனத்தை மாற்றிப் பதிவு செய்யவும் - புது வாகனம் எனில் ஒரு மாதம், பயன்படுத்தப்பட்ட வாகனம் எனில் 12 மாதங்கள்
    • Sவாகன அனுமதி பெறுவதற்காக ஒரு சுவிஸ் காப்பீடு கழகத்தின் மோட்டார் வாகன காப்பீட்டினை வாங்கவும் (கட்டாயமானது).
    • நீங்கள் சுவிஸ் நாட்டிற்கு குடி பெயர்வதற்கு முன்னால் உங்களுடைய பழைய அஞ்சல் நிலையத்தில் உங்கள் புதிய முகவரியினை கொடுத்து உங்கள் தபால்களை அங்கு அனுப்புமாறு சொல்லுங்கள்
    • உங்கள் புதிய வீட்டிற்கு ஒரு தொலைபேசி தொடர்பு மற்றும் ஒரு இன்டர்நெட் தொடர்பினையும் விண்ணப்பியுங்கள்
    • சுவிஸ் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி கட்டணம் செலுத்துவதற்கு இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள்: serafe.ch

சுங்க வரி விதிமுறைகள்

நீங்கள் சுவிஸ் நாட்டிற்கு குடி பெயரும் பொழுது உங்களுடைய வீட்டு பொருட்கள், இதர பொருட்கள், உங்களுடைய வளர்ப்பு மிருகங்கள் மற்றும் மோட்டார் வாகனங்களை எந்த கட்டணமும் இன்றி கொண்டு வரலாம். இதற்கு ஒரே ஒரு விதிமுறைதான் உண்டு - அதாவது நீங்கள் கொண்டுவரும் பொருட்கள் உங்களால் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். மேலும் குடிபெயர்ந்த பின்னரும் அவை உங்களால் பயன்படுத்தப்பட வேண்டும்.

எதற்காக விசானாவிற்கு மாற வேண்டும்?

  • பணத்தினைப் பட்டுவாடா செய்வது: Bonus.ch-னால் நடத்தப்பட்ட ஒரு சார்பற்ற வாடிக்கையாளர் திருப்தி ஆய்வில் நாங்கள் 5.5 புள்ளிகளுடன் சேவைகளின் விவரப்பட்டியல்களை பரிசீலனை செய்து பணம் பட்டுவாடா செய்வதில் மிகச் சிறந்த காப்பீட்டு கழகம் என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். மேலும் 2022-ஆம் ஆண்டு ஒட்டுமொத்த தரவரிசையில் முதலாம் இடத்தைப் பெற்று 5.4 புள்ளிகளை விசானா பெற்றுள்ளது.

  • பெற்றுள்ள அனைவருக்கும் மருத்துவ சட்ட பாதுகாப்பு காப்பீடும் உள்ளடங்கி உள்ளது.

  • myVisana-App என்ற செயலி வாயிலாக காப்பீடு சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்தையும் ஆன்லைனிலேயே செய்து, உங்களுடைய காப்பீட்டு அட்டையை டிஜிட்டல் வடிவத்தில் எப்பொழுதும் உங்களுடன் வைத்திருக்கலாம்.

  • இலவசமாக மருத்துவருடன் 24 X 7 சேட் வசதி.

  • வருடத்தில் எல்லா நாட்களும் 24 மணி நேரமும் உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்.

  • நீங்கள் விசானாவிற்கு மாற முடிவு செய்தீர்கள் எனில், அனைத்து சம்பிரதாயங்களையும் எங்களிடம் நம்பிக்கையுடன் விட்டுவிடலாம். நாங்கள் அவற்றை மிகவும் விருப்பத்துடனும், நம்பகமான முறையிலும் நிறைவேற்றுவோம்.

Nos experts/es vous aident à trouver facilement et rapidement la couverture d’assurance qui vous convient. Demandez sans plus attendre un entretien de conseil personnel.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சுவிஸ் நாட்டில் மூன்று மாதங்களுக்கு மேலாக தங்கும் ஒவ்வொருவரும் சட்டப்படி மருத்துவ காப்பீடு வாங்க கடன் பட்டிருக்கின்றனர். பெரியவர் முதல் சிறியவர்களை குடும்பத்தில் அனைவரும் தனித்தனியாக காப்பீடு வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் வேலைக்காக எல்லை கடந்து வருபவராக இருந்தாலும் சுவிஸ் நாட்டில் கண்டிப்பாக காப்பீடு வைத்திருக்க வேண்டும். வெளிநாட்டில் தங்கி இருந்து சுவிஸில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக மருத்துவ காப்பீடு ஒன்றினை வைத்திருக்க வேண்டும். உங்களுடைய தாய் நாடு மற்றும் குடியுரிமை பொருத்து ஒரு சில சமயம் விதிவிலக்குகள் அளிக்கப்படும். விதிவிலக்குகளை பற்றிய தகவல்களை உடல் நல அமைச்சகம் (BAG) தருகிறது.

நீங்கள் கீழ்காணும் பட்டியலில் ஒன்றைச் சார்ந்தவரெனில் காப்பீடு தேவையில்லை:

  • நீங்கள் ஒரு EU/EFTA-நாட்டில் பணிபுரிகிறீர்கள் அல்லது ஒரு EU/EFTA-நாட்டில் ஓய்வூதியம் மட்டுமே பெற்று சுவிஸ் நாட்டிற்கு குடி பெயர்கிறீர்கள்.
  • நீங்கள் ஒரு EU/EFTA-நாட்டில் இருக்கும் நிறுவனத்தின் வாயிலாக அதிகபட்சம் 24 மாதங்களுக்கு சுவிஸ் நாட்டிற்கு பணி நிமித்தமாக அனுப்பப்பட்டு, தற்காலிகமாக சுவிஸ் நாட்டிற்கு குடிபெயர்க்கிறீர்கள்.
  • நீங்கள் ஒரு வெளிநாட்டு தூதரகத்தில் அல்லது ஒரு பன்னாட்டு அமைப்பில் பணி பணிபுரிந்து, அதன் காரணமாக பன்னாட்டு சட்டத்தின் வாயிலாக சில உரிமைகளை பெற்றிருக்கிறீர்கள்.

சுவிஸ் நாட்டின் கட்டாய காப்பீடு விதிமுறை பற்றி மேலும் தகவல்களை இங்கே காணலாம்.

உங்கள் வருகைக்கு பின் உங்களையும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் ஒரு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்ய உங்களுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் உள்ளது. இந்த அவகாசம் புதிதாய் பெற்றோராக ஆனவர்களுக்கும் பொருந்தும். நீங்கள் கருவுற்றிருக்கும் நேரத்தில் சுவிஸ் நாட்டிற்கு குடி பெயர திட்டமிடுகிறீர்களா? எனில் உங்கள் பிள்ளைக்கு பிரசவத்திற்கு முன்பே மருத்துவ காப்பீடு வாங்கலாம்.

சுவிஸ் நாட்டில் உள்ள எந்த காப்பீடு கழகத்திலும் நீங்கள் காப்பீடு வாங்கலாம். தற்சமயம் 60 காப்பீடு கழகங்கள் உள்ளன. இதில் விசானா மிகப்பெரிய காப்பீடு கழகங்களில் ஒன்றாகும். சுவிஸ் நாட்டு மக்களில் சுமார் 7% விசானாவில் காப்பீடு பெற்றுள்ளனர்.

சுவிஸ் நாட்டின் மருத்துவ கட்டமைப்பு உலகில் மிகச் சிறந்தவற்றுள் ஒன்றாகும். அடிப்படை மருத்துவ சேவை மிகவும் விசாலமானது மற்றும் சிறப்பானது. இச்சிறப்பான சேவையை அளிப்பதற்கான செலவிற்கு ஏற்றவாறு காப்பீட்டுச் சந்தாவும் உயர்வாகவே உள்ளது.

சுவிஸ் நாடு பல்வேறு காப்பீட்டுச் சந்தா மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவேதான் நீங்கள் வசிக்கும் மண்டலம் மற்றும் இடம் பொருத்து அதிகமான அல்லது குறைவான காப்பீட்டுச் சந்தாவை கட்ட நேரிடுகிறது

நீங்கள் கழிப்புத்தொகையை அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த காப்பீட்டு திட்டத்தினை மாற்றுவதன் மூலம் காப்பீட்டுச் சந்தாவினை குறைக்க முடியும். கழிப்புத்தொகை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ காப்பீட்டுச் சந்தா அதற்கேற்றவாறு குறைவாக இருக்கும். வருடம் தோறும் ஜனவரி 1 அன்று உங்களுடைய கழிப்புத்தொகையினை மாற்றவோ அல்லது சந்தா கம்மியான வேறு ஒரு காப்பீட்டு திட்டத்திற்கு மாறவோ செய்யலாம், உ.ம்., காம்பி கேர் (Combi Care).

நீங்கள் வெளிநாட்டில் மூன்று மாதங்களுக்கு மேலாக தங்கினாலோ அல்லது உங்களுடைய பணி நிமித்தமாக வேறு ஒரு காப்பீட்டு திட்டத்தினை வாங்க நேரிட்டாலோ, உங்களுடைய காப்பீட்டு திட்டத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் சந்தா தொகையில் 10% மட்டுமே கட்ட நேரிடும். மேலும் நீங்கள் திரும்பி வந்த பின்னர் உங்களுடைய கூடுதல் காப்பீடுகளை மருத்துவ சான்றிதழ் எதுவும் இல்லாமல் திரும்பத் தொடங்கலாம்.

நீங்கள் பணியில் உள்ளவராக இருந்து வாரத்திற்கு குறைந்த பட்சம் 8 மணி நேரம் வேலை செய்பவராக இருந்தால் உங்களுக்கு தனியாக விபத்து காப்பீடு தேவையில்லை. உங்களுக்கு நிறுவனத்தின் மூலமோ அல்லது உங்கள் முதலாளி வாயிலாகவோ விபத்து காப்பீடு வாங்கப்பட்டிருக்கும்.

சிறு பிள்ளைகளுக்கு சட்டப்படி எந்த கழிப்புத்தொகையும் நிர்ணயிக்கப்படவில்லை. பெற்றோராக நீங்கள் அவர்களுடைய சிகிச்சை செலவில் உங்கள் பங்கிற்கு செலுத்த வேண்டிய தொகையை மட்டும் செலுத்தினால் போதும். இது வருடத்திற்கு அதிகப்பட்சம் CHF 350.- ஆகும். ஒரே குடும்பத்திலிருந்து பல குழந்தைகள் விசானாவில் காப்பீடு செய்யப்பட்டிருந்தால் உங்கள் பங்களிப்பு அதிகப்பட்சம் வருடத்திற்கு CHF 950.- ஆக இருக்கும்.

நீங்கள் ஏதேனும் சேவையை பயன்படுத்தினால் மட்டுமே உங்களுக்கு சேவைகளின் விவரப்பட்டியல் அனுப்பப்படும், உ.ம்., நீங்கள் மருத்துவ ஆலோசனை பெற்றிருந்தால். பொதுவாக சேவைகளின் விவரப்பட்டியலை உங்கள் மருத்துவர் எங்களுக்கு நேரடியாக அனுப்புவார். நாங்கள் உங்களுடைய பங்கை உங்களிடம் இருந்து கேட்பதற்கு முன்பாக உரிய தொகையை அவருக்கு அளிப்போம். புறநோயாளி சிகிச்சைக்கான சேவை விவரப்பட்டியல் பல முக்கியமான விவரங்களை உள்ளடக்கி இருக்கும்.

  • காப்பீடு செய்யப்பட்ட நபரைப் பற்றிய தகவல்கள்
  • சேவை அளித்தவரைப் பற்றிய தகவல்கள் (மருத்துவர், சிகிச்சையாளர், மருந்து கடை, ஆய்வகம், மருந்துகள் போன்றன) 
  • சிகிச்சை நாள் மற்றும் கால அளவு
  • விவரப்பட்டியலின் வடிவமைப்பு

விவரப்பட்டியலின் முதல் பகுதியில் அளிக்கப்பட்ட சேவை அடிப்படை காப்பீட்டில் அடங்கியுள்ளதா அல்லது கூடுதல் காப்பீட்டின் மூலமாக அளிக்கப்பட்டதா என்ற விவரம் இருக்கும். அடுத்த மூன்று பத்திகளில் கூடுதல் தகவல்களைக் காணலாம்.

  • கழிப்புத்தொகை: நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த கழிப்புத்தொகையை கொண்டு மருத்துவர், மருத்துவமனை, மற்றும் மருந்துகளின் செலவுகளில் பங்களிப்பீர்கள்.
  • சுய பங்களிப்பு: கழிப்புத்தொகைக்கு மேல் அதிகப்படியாக ஆகும் சிகிச்சை செலவுகளில் 90% காப்பீட்டு கழகம் ஏற்றுக்கொள்ளும் மீதம் இருக்கும் 10% தொகையினை (அதிகபட்சம் வருடத்திற்கு CHF 700.-) நீங்கள் சுய பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
  • காப்பீடு செய்யப்படாதத் தொகை: அடிப்படை காப்பீடு மற்றும் கூடுதல் காப்பீட்டில் உள்ளடங்காத சேவைகள் அனைத்திற்கான செலவுகளையும் நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பட்டியலுக்கு அடியில் காப்பீட்டு கழகம் சேவை அளித்தவருக்கு எவ்வளவு தொகையினை செலுத்தி உள்ளது என காணலாம். விசானா முழுத் தொகையையும் செலுத்தி விட்ட பின்னர் உங்களுடைய பங்கை உங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும்.

ஒரு சில சமயங்களில் நீங்கள் சேவை அளிப்பவருக்கு நேரடியாக பணத்தினை செலுத்தி விடுவீர்கள். அதன் பின்னர் காப்பீட்டுக் கழகத்தின் பங்கினை விசானா உங்களுக்கு அளிக்கும். இந்த பக்கத்தின் அடியில் அந்த வருடத்திற்கான செலவுகளின் பங்களிப்பின் கண்ணோட்டத்தினை காணலாம்.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுது அளிக்கப்படும் சேவைகளின் விலைப்பட்டியல் ஏறக்குறைய அதே தகவல்களைக் கொண்டிருக்கும். ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுது சட்டப்படி பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனையில் தங்குதலுக்கான தொகையான CHF 15.-னை நீங்களே செலுத்த வேண்டி இருக்கும். இந்த தகவல், மொத்தத் தொகை, மற்றும் சுய பங்களிப்பு ஆகியவற்றின் விவரங்களை செலவுகளின் அட்டவணையில் காணலாம் இது <Ihr Anteil> என்ற பத்தியின் அடியில் இருக்கும்.

விசானா செயலியினை ஆப் ஸ்டோர் (App Store) அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். விசானா செயலி மற்றும் மைவிசானா (myVisana) வாடிக்கையாளர் போர்ட்டல் வாயிலாக உங்கள் காப்பீடு சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் ஆன்லைனில் செய்யலாம். வாடிக்கையாளர் போர்ட்டலில் நீங்கள்:

  • உங்கள் குடும்பத்தினரின் பாலிசிகள், ரசீதுகள், மற்றும் சேவைகளின் விவரப்பட்டியல்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம் 
  • மருத்துவர்களின் ரசீதுகளைப் புகைப்படம் எடுத்து அவற்றை பதிவேற்றம் செய்து விசானாவிடம் நேரடியாக ஆன்லைனில் அளிக்கலாம். செலவுகளில் விசானாவின் பங்களிப்பு மற்றும் உங்களின் சுய பங்களிப்பு ஆகியவற்றை பரிசீலனை செய்யலாம்
  • வெவ்வேறு கழிப்புத்தொகைகளுக்கு சந்தாவினை கணக்கிட்டு உங்களுக்கு விருப்பமான கழிப்புத்தொகைக்கு மாறலாம்
  • உரிமையின் மாறுபாடுகளைச் சரிபார்த்து ஆன்லைனில் மாற்றவும்
  • வாடிக்கையாளர் போர்ட்டலில் உங்கள் காப்பீட்டிற்கு தொடர்பான புதிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை push-செய்திகள் மூலம் அறியலாம்
  • குடும்பத்தினர் அனைவரின் காப்பீட்டு அடையாள அட்டையினை திறந்து பார்க்கலாம்
  • மருத்துவர் மற்றும் மருத்துவமனை ரசீதுகளை அனைவருக்கும் புரியக்கூடிய ஒரு மொழியில் «மொழிபெயர்க்கலாம்»

எங்களுடைய ஆன்லைன் போனஸ் திட்டமான myPoints-ஐ நீங்கள் செயலி மூலம் பயன்படுத்தலாம். உங்களுடைய தினசரி உடற்பயிற்சி/ நடைப்பயிற்சி மற்றும் வாடிக்கையாளர் விசுவாசம் ஆகியவற்றிற்கு வருடத்திற்கு CHF 120.- வரை பரிசாக நீங்கள் பெறலாம்.

நிற்க: விசானாவில் கூடுதல் காப்பீடு பெற்றுள்ள 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே myPoints-ஐ பயன்படுத்த முடியும்

சுவிஸ் நாட்டின் சுகாதார செயலியான வெல் (Well) செயலி விசானாவின் செயலியிலும் உள்ளடங்கியுள்ளது. உடல் சுகம் இல்லை எனில் நீங்கள் Doctor Chat வழியாக ஒரு மருத்துவருடன் சேட் செய்யலாம். மேலும் அறிகுறிகளை Symptom Checker வழியாக பரிசீலிக்கலாம் அல்லது ஒரு மருத்துவருடன் ஆலோசனை நேரத்தை பதிவு செய்யலாம்.

myVisana பற்றி கூடுதல் தகவல்கள்

காகிதத்தின் பயன்பாட்டினை குறைக்க காப்பீடு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆவணங்கள் மற்றும் ரசீதுகளை நேரடியாக செயலியின் மூலம் மட்டுமே பெறுவார்கள்.

காப்பீட்டு இரத்து சட்ட விதிமுறைகளுக்கு (KVG/VVG) உட்பட்டது. இரத்து செய்வதற்கான தகவல் எழுத்து வடிவத்தில் சரியான நேரத்தில் தெரிவிக்கப்பட வேண்டும். அதாவது காப்பீட்டினை இரத்து செய்வதற்கான தொடங்குவதற்கு முன்னால் உள்ள கடைசி வேலை நாளன்று விசானாவிடம் வந்தடைய வேண்டும்.

அடிப்படை காப்பீட்டினை ரத்து செய்வதற்கான விண்ணப்பக் கடிதம் அதிகபட்சமாக நவம்பர் மாத கடைசி வேலை நாளன்று விசா நாவிற்கு வந்து அடைய வேண்டும் கூடுதல் காப்பீடுகள் அனைத்தும் மூன்று மாதத்திற்கு முன்னால் தகவல் அளித்து ரத்து செய்யப்பட வேண்டும் இதற்கான கடிதம் செப்டம்பர் மாதம் கடைசி வேலை நாளன்று காப்பீட்டுக் கழகத்திடம் வந்து அடைய வேண்டும்.

  • நீங்கள் உங்களுடைய சந்தா தொகையினை வருடத்திற்கு இருமுறை செலுத்தினால் நாங்கள் உங்களுக்கு 1% சந்தா தள்ளுபடி அளிக்கிறோம் இதுவே வருடத்திற்கு ஒருமுறை செலுத்தினால் சந்தா தள்ளுபடி 2%-மாக இருக்கும்.

     

  • நீங்கள் பல வருடங்களுக்கு எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் உங்களுக்கு மேலும் சந்தா தள்ளுபடி கிடைக்கும். ஒரு 3-வருட ஒப்பந்தம் உங்களுக்கு 2% தள்ளுபடியையும் 5 வருட ஒப்பந்தம் 3% தள்ளுபடியையும் அளிக்கும்.

     

  • எங்களுடைய புறநோயாளிச் சேவைகளுக்கான கூடுதல் காப்பீடு மூலம் நீங்கள் உடல்நலம் பரிசோதனைகள், உடற்பயிற்சி மையங்கள், மற்றும் உடல்நிலை தேறுவதற்கான ஆரோக்கிய மையங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் வருடத்திற்கு CHF 350.- வரை சேமிக்கலாம்.

     

  • எங்களுடைய டிஜிட்டல் போனஸ் திட்டம் myPoints மூலம் நீங்கள் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வதற்கு மற்றும் வாடிக்கையாளர் விசுவாசத்திற்கும் வருடத்திற்கு CHF 120.- வரை பெறலாம்.

Visana Services SA
Siège principal
Weltpoststrasse 19
3000 Berne 16

Téléphone: 0848 848 899