நீங்கள் பணியில் உள்ளவரானால், வாரத்திற்கு 8 மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மூலமாக விபத்துக்கான காப்பீடு பெறப்பட்டிருக்கும். இந்த காப்பீட்டு திட்டத்தில் தரப்படும் சேவைகள் அனைத்தும் விபத்து காப்பீட்டுச் சட்டத்தின்படி (UVG) உள்ளவைகளாகும். எனவே மருத்துவ காப்பீடு வாங்கும்போது நீங்கள் விபத்து காப்பீட்டினை வாங்காமல் தவிர்த்து செலவை மிச்சப்படுத்தலாம். மேலும் மிகவும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு அவர்களின் மருத்துவ காப்பீட்டுச் சந்தாவிற்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்திற்கு சந்தா குறைப்பு என்று பெயர்.
ஒருவேளை நீங்கள் சுயதொழில் புரிபவராக இருந்தாலோ அல்லது பணியில் இல்லை, அல்லது வாரத்திற்கு 8 மணி நேரத்திற்கு குறைவாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்றாலோ உங்களுக்கு விபத்து காப்பீடு கிடைக்காது. எனவே நீங்கள் கூடுதலாக விபத்து காப்பீட்டினையும் வாங்க வேண்டும்.
இதைத் தெரிந்து கொள்வது நல்லது
சுவிஸ் நாட்டில் மருத்துவ காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு இரண்டுமே கட்டாயமானவை. எனவே உங்களுடைய காப்பீட்டுத் தொகையினை உங்களுடைய வாழ்க்கைத்தரத்திற்கு ஏற்றவாறு அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.